பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்
|பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. தினந்தோறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களும் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும். சில நேரங்களில் மின்சார ரெயில்களின் வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படும்.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் தாம்பரம் - கடற்கரை இடையே கீழ்கண்ட மின்சார ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் அங்கிருந்து சென்னை கடற்கரைக்கு வரும் ரெயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரெயில் சேவையில் மாற்றப்பட்ட நேர அட்டவணை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.