பராமரிப்பு பணி: மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
|தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கமான தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;
* செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16848) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5-ந் தேதி, 7-ந் தேதி, 19-ந் தேதி, 20-ந் தேதி, 21-ந் தேதி, 23-ந் தேதி, 26-ந் தேதி, 27-ந் தேதி, 30-ந் தேதி, அடுத்த மாதம் 3, 6 மற்றும் 8-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அந்த பாதையில் மானாமதுரை மற்றும் காரைக்குடியில் இந்த ரெயில் நின்று செல்லும்.
* நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16352) வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மானாமதுரையில் இந்த ரெயில் நின்று செல்லும்.
* கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 21-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும்.
* குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) 20-ந் தேதி, 25-ந் தேதி, அடுத்த மாதம் 2 மற்றும் 5-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயிலும் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும்.
* மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் செல்லும் வாராந்திர அனுராவத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22631) வருகிற 26-ந் தேதி மதுரையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு புறப்படும்.