பராமரிப்பு பணி: மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவையில் மாற்றம்
|பராமரிப்பு பணி காரணமாக மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெங்களூரு பையப்பனஹள்ளி யார்டில் பாதுகாப்பு மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மைசூரு-தூத்துக்குடி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16236) இன்று (புதன்கிழமை) கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், பானசவாடி, கார்மேலரம் வழியாக இயக்கப்பட உள்ளது.
காரைக்கால்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16530) இன்று பெல்லந்தூர் சாலை, எஸ்.எம்.வி.டி. இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது. பங்காருபேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு 'மெமு' ரெயில் (16521) இன்று கே.ஆர்.புரம், கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.
பெங்களூரு கண்டோன்மென்ட்-சிக்பள்ளாப்பூர் 'மெமு' ரெயில் (வண்டி எண்: 06538), சிக்பள்ளாப்பூர்-பெங்களூரு 'மெமு' ரெயில் (06532), பங்காருபேட்டை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு 'மெமு' ரெயில் (06527) ஆகியவை இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-பங்காருபேட்டை 'மெமு' ரெயில் (06528) நாளை (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.