பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
|பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருவாயூரில் இருந்து வரும் 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16128) மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 14-ந்தேதி காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) மேற்கண்ட மாற்று வழித்தடம் வழியாக குருவாயூர் செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையம் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர், ஈரோடு வழியாக கோவை சென்றடையும். மறுமார்க்கமாக, கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16322) மேற்கண்ட மாற்று வழித்தடம் வழியாக நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து இன்று (12-ந்தேதி) காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையம் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மும்பை சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையம் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக மும்பை சென்றடையும்.
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666) மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையம் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக ஹவுரா சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.