< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
2 Dec 2024 9:12 PM IST

பராமரிப்பு பணி காரணமாக கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேட்டுப்பாளையத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை), 5, 6, 8 ஆகிய தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் மின்சார ரெயில் (மெமு), கோவை - போத்தனூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.

சோரனூரில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 5, 6, 8 ஆகிய தேதிகளில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் பயணிகள் ரெயிலும், மதுரையில் இருந்து இதே தேதிகளில் காலை 7 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16722), போத்தனூர் - கோவை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, போடனூரில் நிறுத்தப்படும்.

கண்ணூரில் இருந்து நாளை மற்றும் 5, 6, 8 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16607), போத்தனூர் - கோவை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, போத்தனூரில் நிறுத்தப்படும். கோவையில் இருந்து 3, 5, 6, 8 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சோரனூர் செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக போத்தனூரில் இருந்து மாலை 4.41 மணிக்கு புறப்பட்டு சோரனூர் செல்லும்.

கோவையில் இருந்து நாளை மற்றும் 5, 6, 8 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16608), அதற்கு மாற்றாக போத்தனூரில் இருந்து மதியம் 2.03 மணிக்கு புறப்பட்டு கண்ணூர் செல்லும்.

போத்தனூரில் இருந்து நாளை மற்றும் 5, 6, 8 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் மின்சார ரெயில் (மெமு), அதற்கு மாற்றாக கோவையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும். கோவையில் இருந்து நாளை மற்றும் 5, 6, 8 ஆகிய தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16721), அதற்கு மாற்றாக போத்தனூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்