< Back
மாநில செய்திகள்
திருச்சி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் மாற்றம்
மாநில செய்திகள்

திருச்சி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் மாற்றம்

தினத்தந்தி
|
10 Nov 2024 7:33 AM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

திருச்சி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையிலும், சில ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* காரைக்குடியில் இருந்து வரும் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையில் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.06888) ரத்து செய்யப்படுகிறது.

புறப்படும் இடம் மாற்றம்

* மயிலாடுதுறையிலிருந்து வரும் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி சந்திப்பு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16833) பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும்.

* ஈரோட்டில் இருந்து வரும் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காலை 8.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி சந்திப்பு வரும் பயணிகள் ரெயில் (06810), திருச்சி கோட்டை வரை மட்டுமே இயக்கப்படும்.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 12-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி சந்திப்பு வரும் ரெயில் (06891), பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும்.

பகுதி நேர ரத்து

* திருச்சியிலிருந்து வரும் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் ரெயில் (06892), அதற்கு மாற்றாக பொன்மலையில் இருந்து மாலை 6.09 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும். திருச்சி சந்திப்பு - பொன்மலை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சியிலிருந்து வரும் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16834), அதற்கு மாற்றாக திருவெறும்பூரில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். திருச்சி சந்திப்பு - திருவெறும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சியிலிருந்து வரும் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16843), அதற்கு மாற்றாக திருச்சி கோட்டையில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுன் செல்லும். திருச்சி சந்திப்பு - திருச்சி கோட்டை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப்பாதை

* ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து வரும் 14-ந்தேதி இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16788), கரூர், திண்டுக்கல் வழியாக நெல்லை செல்லும். திருச்சி சந்திப்பு ரெயில் நிலையம் செல்லாது.

* தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து வரும் 17-ந்தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (16353), கரூர், திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் செல்லும். திருச்சி சந்திப்பு ரெயில் நிலையம் செல்லாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்