< Back
மாநில செய்திகள்
மகா சிவராத்திரி விழா மனித குலத்திற்கான கொண்டாட்டம்: ஜக்கி வாசுதேவ்
மாநில செய்திகள்

மகா சிவராத்திரி விழா மனித குலத்திற்கான கொண்டாட்டம்: ஜக்கி வாசுதேவ்

தினத்தந்தி
|
27 Feb 2025 9:52 AM IST

மகா சிவராத்திரி விழா மனித குலத்திற்கான கொண்டாட்டம் என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்.

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமை தாங்கி பேசியதாவது:-

மகா சிவராத்திரி நாள் என்பது எந்த சாதி, மதம், பாலினத்தவராக இருந்தாலும் உயிர் சக்தி மேல் எழுவதற்கான நாள் ஆகும். இந்த விழா ஆன்மிகத்தின் வெளிப்பாடு. ஒரு புகழ் பெற்ற நபர் என்னிடம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மகா சிவராத்திரி விழாவுக்கு வரலாமா? என கேட்டார். அதற்கு நான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் குறிப்பாக இந்துக்கள் யாரும் வர முடியாது, மனிதர்கள் மட்டுமே வர முடியும் என்று பதிலளித்தேன். இது மனித குலத்திற்கான கொண்டாட்டம்.

நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர். ஆதியோகி வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறார். ஆதியோகி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வர உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்து உள்ளார். காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்