< Back
மாநில செய்திகள்
மகா கும்பமேளா: கன்னியாகுமரி - கயாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
மாநில செய்திகள்

மகா கும்பமேளா: கன்னியாகுமரி - கயாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
31 Dec 2024 8:08 AM IST

மகாகும்பமேளாவையொட்டி கன்னியாகுமரி - கயாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்க உள்ள கும்பமேளாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, கன்னியாகுமரியில் இருந்து மதுரை, சென்னை வழியாக கயாவுக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் (வ.எண்.06005) கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு கயா சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06006) கயாவில் இருந்து வருகிற 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைகிறது. இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. நள்ளிரவு 3.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து மதுரை, சென்னை வழியாக பனாரசுக்கு ஒரு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06003) கன்னியாகுமரியில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இரவு 9.50 மணிக்கு பனாரஸ் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06004) பனாரசிலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு சென்னை ரெயில் நிலையமும், மாலை 3.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள், நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில், 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், ஒரு 3-அடுக்கு எகனாமி குளிரூட்டப்பட்ட பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொதுப்பெட்டி மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்