< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை மெட்ரோ பணிகள் இன்னும் 6 மாதத்தில் தொடங்க வாய்ப்பு
|22 Dec 2024 8:35 AM IST
வைகை ஆற்றின் கீழ் பகுதியில் மெட்ரோ ரெயிலில் செல்லும்போது வியப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மதுரை,
மதுரையில் ரூ.11 ஆயிரத்து 340 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில், அதற்கான பூர்வாங்க பணிகள் குறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தலைமையில் சிறப்பு குழுவினர் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த குழுவினர் மதுரை ரெயில் நிலைய பகுதியில் தொடங்கி ஆண்டாள்புரம் வரை, மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு சிக்கல் நிறைந்த இடங்களில் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை மெட்ரோ திட்டப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், வைகை ஆற்றின் கீழ் பகுதியில் மெட்ரோ ரெயிலில் செல்லும்போது வியப்பாக இருக்கும் எனவும் திட்ட இயக்குனர் அர்ஜூனன் கூறினார்.