< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை அரசு மருத்துவமனையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் - கோர்ட்டு அதிரடி உத்தரவு
|8 Nov 2024 7:10 AM IST
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சமீபத்தில் பெயர்ந்து விழுந்தது. இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் சிவில் துறைத் தலைவர், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.