< Back
மாநில செய்திகள்
மதுரை: மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மாநில செய்திகள்

மதுரை: மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தினத்தந்தி
|
30 Oct 2024 9:12 AM IST

மதுரையில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மதுரை,

முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்தநாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆகியோர் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன், கோ தளபதி. எம்.எல்.ஏ.மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்