< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
|29 Oct 2024 4:37 AM IST
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
திண்டுக்கல்,
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 27). கடந்த 2021-ம் ஆண்டு இவர், 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காளிதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. குற்றம் சாட்டப்பட்ட காளிதாசுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.