< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை: பாலம் அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்தது - 4 பேர் படுகாயம்
|28 Nov 2024 7:42 AM IST
மதுரையில் பாலம் அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை,
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ரூ. 190 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பாலம் ஸ்டேஷன் சாலையில் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்காக இரும்பு சாரம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இணைப்பு பாலத்துக்காக அமைக்கப்பட்ட சாரம் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. சுமார் 200 அடி தூரத்துக்கு சாரம் சரிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த 4 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த ஊழியர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.