< Back
மாநில செய்திகள்
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு - ஐகோர்ட்டு கண்டனம்
மாநில செய்திகள்

கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு - ஐகோர்ட்டு கண்டனம்

தினத்தந்தி
|
29 Nov 2024 4:27 PM IST

அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் அந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களின் கலெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது அரசு தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாதது குறித்து நீதிபதிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், இதற்கு உதாரணமாக கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் இதுவரை அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தமிழக பொதுத்துறை செயலாளர், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இன்று ஆஜரான நிலையில், வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜராகாததற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பொதுத்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தனர். மேலும் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்