சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
|பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுல்லைவாயல்: வெள்ளானூர் முழுவதும், கொள்ளுமேடு. மகளிர் தொழிற்பேட்டை, கன்னடப்பாளையம், போத்தூர், அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்திநகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ் பகுதி.
எண்ணூர்: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேருநகர், சாஸ்திரிநகர், அண்ணாநகர், சிவன்பேட்டை வீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம்.நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், இடிபிஎஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம்.
பன்ஜெட்டி: பன்ஜெட்டி, தச்சூர் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கில்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், கோடூர், கே.பி.கே. நகர் மற்றும் டி.வி.புரம் வேலம்மாள் ரெசிடென்சி.
பாரிவாக்கம்: திருக்கோயில்பத்து, திருமணம், காவல்ச்சேரி, வயலானல்லூர், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு.
பூவிருந்தவல்லி - வேலப்பன்சாவடி: கேந்திரிய விஹார். இண்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல் மெயின் ரோடு, பி.எச்.ரோடு, சன்னதி தெரு, வள்ளி கொல்லை மேடு, பல்லவன் நகர், பெருமாள் அகரம், எம்.ஜி.ஆர்.நகர்.
பூவிருந்தவல்லி - மாங்காடு: மாங்காடு குன்றத்தூர் சாலை, துளசிதாஸ் நகர், எம்ஜிஆர் நகர், அம்மன் கோயில் தெரு, பூஞ்சோலைவீதி, தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், மேட்டுதெரு, பஜார் தெரு, துபாஸ் தெரு, கோரிமேடு, கங்கை அம்மன் கோவில் தெரு, சக்தி நகர், விஜயலட்சுமி நகர், அட்கோ நகர், ஆவடி மெயின் ரோடு, குன்றத்தூர் சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம், தீயணைப்பு நிலையம், முருகப்பிள்ளை தெரு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.