< Back
மாநில செய்திகள்
அடுத்த மாதம் 3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை
மாநில செய்திகள்

அடுத்த மாதம் 3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
18 Nov 2024 4:58 PM IST

சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச., 3-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோட்டார் தூய சவேரியர் பேராலய திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3 ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, டிசம்பர் 14-ம் தேதியை பணி நாளாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்