தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை
|தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கோலாகலமக கொண்டாடப்பட்டது. முன்னதாக டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விடுமுறை நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் கடந்த 30ம் தேதி ரூ.47.16 கோடிக்கும், 31ம் தேதி தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று மதுரையில் 30ம் தேதி ரூ.40.88 கோடி, 31ம் தேதி ரூ.47.73 கோடிக்கும், திருச்சியில் 30ம் தேதி ரூ.39.81 கோடி, 31ம் தேதி ரூ.46.51 கோடிக்கும், சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி, 31ம் தேதி ரூ.45.18 கோடி, கோவையில் 30ம் தேதி ரூ.36.40 கோடி, 31ம் தேதி ரூ.42.34 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 30ம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி நாளான 31ம் தேதி ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட ரூ.29.10 கோடி குறைவாகும். கடந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகையையொட்டி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மதுரையைவிட சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.