< Back
மாநில செய்திகள்
எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மாநில செய்திகள்

எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
19 Nov 2024 1:27 PM IST

இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. (LIC) இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது எல்.ஐ.சி-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.

அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்