< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
2026-ல் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|22 Dec 2024 6:54 PM IST
எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம்!
75 ஆண்டுகளாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க! செயற்குழுவில் பெற்ற கருத்துகள், வகுத்த வியூகங்களுடன் 2026-ல் நம் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!" என்று தெரிவித்துள்ளார்.