< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கட்டபொம்மனின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம் - டி.டி.வி.தினகரன்
|16 Oct 2024 2:15 PM IST
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
சென்னை ,
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 234-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே தாய்மண்ணை காக்க ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினம் . ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்து, அவர்களுக்கு எதிராக புரட்சி செய்ததோடு, தூக்கு மேடையின் விளிம்பிலும் மரணத்தை தீரத்துடன் எதிர்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம். என தெரிவித்துள்ளார்