< Back
மாநில செய்திகள்
தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி... வனத்துறையினர் விசாரணை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி... வனத்துறையினர் விசாரணை

தினத்தந்தி
|
1 Jan 2025 9:03 AM IST

திண்டுக்கல்லில் சிறுத்தை குட்டி ஒன்று தோட்டத்தில் இறந்து கிடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் குட்டிகரடு முருகன் கோவில் பின்புறம் தனியார் தோட்டம் உள்ளது. நேற்று அந்த தோட்டத்தில் இருந்த முள்வேலியில் சிக்கி சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், உதவி வனபாதுகாவலர் நிர்மலா, வனச்சரகர் ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்தனர். அந்த சிறுத்தை குட்டி சுமார் 2½ வயது உடையது என்பது தெரியவந்தது. பின்பு வனத்துறையினர் சிறுத்தையின் உடலை எரித்தனர். அந்த சிறுத்தை குட்டி இரை தேடி வந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்