< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் காலமானார்
|24 Nov 2024 9:04 PM IST
குணச்சித்திர நடிகர் தனபால் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சென்னை,
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் (95). ரஜினிகாந்த் நடித்த 'நான் மகான் அல்ல, விஜயகாந்த் நடித்த 'சொக்கத்தங்கம்' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனபால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.