< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி: காணாமல்போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கோவில்பட்டி: காணாமல்போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
10 Dec 2024 8:27 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. கூலி தொழிலாளியான இவர்களது 2-வது மகன் கருப்பசாமி (வயது10). இவன் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் நேற்று கார்த்திக் முருகனும், பாலசுந்தரியும் வேலைக்கு சென்று விட்டனர். கருப்பசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளான். வீட்டிலிருந்த கருப்பசாமி திடீரென மாயமாகி விட்டான். உறவினர் வீடுகளிலும், அக்கம் பக்கத்தில் தேடியும் அவனை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மாயமான கருப்பசாமியை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காணாமல்போன சிறுவன் கருப்பசாமி, பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சிறுவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்