< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகள்; மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி ஆய்வு
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகள்; மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி ஆய்வு

தினத்தந்தி
|
3 Nov 2024 8:59 PM IST

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கேற்ற வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 18 இடங்களில், மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலிலுக்கு இன்று வருகை தந்த மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளையும், புதிதாக திறக்கப்பட்ட விடுதிகளையும் பார்வையிட்டார்.

அப்போது விடுதி அறையில் இருந்த தொலைக்காட்சியை அகற்றி விடுமாறும், விடுதிக்கு வருபவர்கள் இறை சிந்தனையுடனேயே இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, கோவில் அறங்காவலர் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்