< Back
மாநில செய்திகள்
சென்னையில் கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் - 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாநில செய்திகள்

சென்னையில் கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் - 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தினத்தந்தி
|
21 Oct 2024 5:35 AM IST

கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

சென்னை,

கமல்ஹாசன் (நம்மவர்) தொழிற்சங்க பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவையின் புதிய அலுவலகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் திறந்து வைத்தார். அதன் கொடியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா ஏற்றி வைத்தார். பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.சொக்கர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கமல்ஹாசன் ஆலோசனையின்படி 234 தொகுதிகளிலும் விரைந்து தொழிற்சங்கங்களை ஏற்படுத்தி பேரவையுடன் இணைக்க வேண்டும். கமல்ஹாசனின் பிறந்தநாளை (நவம்பர் 7-ந்தேதி) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்