< Back
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி: விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து

10 March 2025 8:55 AM IST
கள்ளக்குறிச்சியில் விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த ஆம்புலன்சில் செல்வகுமார் என்ற நோயாளி மற்றும் அவரின் தாயார், மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் பயணித்தனர்.
நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் விறகு ஏற்றிச்சென்ற லாரி மீது பின்பக்கத்தில் இருந்து மோதியது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த நோயாளி, அவரின் தாயார், மருத்துவ உதவியாளர் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.