< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி:  ஒரே குடும்பத்தில் 3 பேர் மர்ம மரணம்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி: ஒரே குடும்பத்தில் 3 பேர் மர்ம மரணம்

தினத்தந்தி
|
12 Feb 2025 8:38 AM IST

கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில் தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் மரணம் அடைந்தது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இதில், தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன் ஆகியோரது உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் மிதந்தன.

அவர்கள் 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். பின்னர் அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மரணத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டையில் தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் மர்ம மரணம் அடைந்தது அந்த பகுதியில் வசிப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்