< Back
கல்வி/வேலைவாய்ப்பு
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை - முழு விபரம்
கல்வி/வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை - முழு விபரம்

தினத்தந்தி
|
21 Nov 2024 3:16 PM IST

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் 2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் "System Analyst cum Data Manager" என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான கல்வித்தகுதி விவரங்கள் https://foodsafety.tn.gov.in/api/media/notification files/System Analyst Cum Data Manager.pdf என்னும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எனவே, தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் புகைப்படத்துடன் (Passport Size) 28.11.2024 அன்று மாலை 05.௦௦ மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெற வேண்டும்.

ஆணையர் அலுவலகம்,

உணவு பாதுகாப்புத் துறை,

முதல் மற்றும் இரண்டாம் தளம்,

பழைய மீன்வளத்துறை அலுவலக கட்டிடம்.

டி.எம்.எஸ்வளாகம்,

359, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை-6

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து துறையின் முடிவே இறுதியானது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்