< Back
மாநில செய்திகள்
பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது - கனிமொழி எம்.பி.
மாநில செய்திகள்

'பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது' - கனிமொழி எம்.பி.

தினத்தந்தி
|
22 Nov 2024 6:36 PM IST

பிரதமர் இதுவரை ஒருமுறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களை சந்திப்பதற்காக இந்த நாட்டின் பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செயல் என தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மணிப்பூரில் பா.ஜ.க.வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் வன்முறை சம்பவங்கள், உலகத்தின் முன்னாள் நம்மை தலைகுனிய வைக்கும் நிகழ்வாகவே இருக்கிறது. இந்த நாட்டின் பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் மக்களை சந்திப்பதற்காகவோ, அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவோ அங்கு செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க செயலாகும்."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்