< Back
மாநில செய்திகள்
தமிழ்த் தாயை  புறக்கணிப்பது  நியாயமா..? முதல்-அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
மாநில செய்திகள்

தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா..? முதல்-அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தினத்தந்தி
|
7 Nov 2024 10:55 AM IST

பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா என்று தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் பாடியவர்களின் குறையில் கவர்னர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள். உங்கள் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே, இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.

குறை இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையே தவிர்ப்பது நியாயமா? பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா? குறையோடு பாடுவது அநீதி... அதற்காக....பாடாமல் இருப்பது நீதியா?

இவ்வாறு அதில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


மேலும் செய்திகள்