துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் முறைகேடு; தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
|தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் தலைவிரித்து ஆடும் என்பதற்கேற்ப, ஊழல், கமிஷன், வசூல் . இப்பொழுது அதைத்தான் மேற்கொண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களிடமிருந்து தாமற்ற பொருட்களை கொள்முதல் செய்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகித்து மக்களின் பணத்தை வீனடித்ததே ஊழலுக்கு சிறந்த உதாரணம். அந்த வரிசையில், தற்போது தரமற்ற நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்ய தி.மு.க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 60,000 டன் துவரம் பருப்பு மற்றும் ஆறு கோடி லிட்டர் பாமாயில் விநியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியதாகவும், இதில் கலந்து கொண்ட நிறுவனங்களில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கிய ஆறு நிறுவனங்கள் மற்றும் பாமாயிலுக்கு மாதிரி வழங்கிய மூன்று நிறுவனங்கள், ஆக மொத்தம் ஒன்பது நிறுவனங்களின் பொருட்கள் தரமற்றவை என ஆய்வு அறிக்கை தெரிவித்த நிலையில், மேல்மட்டத்திலிருந்து வந்த நெருக்கடி காரணமாக நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டு தரமானவை என்று பரிந்துரைக்க நிர்பந்திக்கப்பட்டகவும் செய்திகள் வருகின்றன.
இதன் பின்னர், ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணை நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் இரு நிறுவனங்களின் மாதிரி முநல் முறை தா பரிசோதனையில் தேர்வாகவில்லை என்றும். இதேபோன்று பாமாயிலுக்கான கொள்முதல் ஆணை நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த நிறுவனங்களுக்கும் தர பரிசோதனையில் விதிகளை மீறி சலுகை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தரப் பரிசோதனையில் தேர்வாகாத நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகித்தால் அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், அந்த நிறுவனங்களிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்வது என்பது ஊழலின் ஒலின் உச்சகட்டம். ஆதாயம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கடும் கண்டனத்திற்குரியது.
முதல்-அமைச்சர் , இதில் தனிக் கவனம் செலுத்தி, தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் , மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க தரமான வேண்டுமென கேட்டுக் கொன்கிறேன். என தெரிவித்துள்ளார் .