< Back
மாநில செய்திகள்
சென்னையில் 1,363 பஸ் நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி
மாநில செய்திகள்

சென்னையில் 1,363 பஸ் நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி

தினத்தந்தி
|
30 Dec 2024 11:05 AM IST

சென்னையில் 1,363 பஸ் நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக அனைத்து பஸ் நிலையங்களிலும் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிர தூய்மை பணிகள் நடந்தன.

அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் 2-ம் கட்டமாகத் தூய்மைப் பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன. 15 மண்டலங்களில் உள்ள 1,363 பஸ் நிறுத்தங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனுமதியின்றி வைக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. பஸ் நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் இருக்கைகளும் சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்