< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேயர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
|9 Nov 2024 3:23 PM IST
மேயர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
சென்னை,
மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட புதிய வாழைமா நகர், 5-வது தெருவில் ரூ.93.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு இன்று (09.11.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 74-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, அதில் குழந்தைகள் மையத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.