< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு
|1 Dec 2024 12:01 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாகவும் உள்ளது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,528 கன அடியில் இருந்து 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 110.58 அடியாகவும், நீர் இருப்பு 79.23 டி.எம்.சி.யாகவும் உள்ளது. தமிழக காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.