< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
|30 Oct 2024 10:33 PM IST
சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 125 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தீப ஒளி திருநாளான தீபாவளியை பட்டாசுகள் வெடித்து இனிப்பு பரிமாறி மக்கள் கொண்டாடுவது வழக்கம். நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இன்றே பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து வருகிறார்கள். இதனால், காற்று மாசும் அதிகரித்துள்ளது.
சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 125 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. மணலியில் 229, ஆலந்தூரில் 213, அரும்பாக்கத்தில் 119 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது. நேற்று சென்னையில் சராசரியாக காற்று மாசு அளவு 90ஆக பதிவாகி இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளே காற்று மாசு அதிகரித்துள்ளது.