< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் மழை: நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
|20 Nov 2024 6:41 AM IST
நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (புதன்கிழமை) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.