< Back
மாநில செய்திகள்
சட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

சட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
16 Nov 2024 7:13 PM IST

சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மாடு மேய்க்கும்போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தனது தந்தைக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழப்பிற்கு மின்சார வாரியம் பொறுப்பு ஏற்காது என்று சென்னை ஐகோர்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் தோட்ட உரிமையாளருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்