< Back
தமிழக செய்திகள்
இந்தி மொழியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம்: மு.க.ஸ்டாலின் காட்டம்
தமிழக செய்திகள்

இந்தி மொழியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம்: மு.க.ஸ்டாலின் காட்டம்

தினத்தந்தி
|
19 Feb 2025 12:44 PM IST

துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்பத் திராவிடத்தில் இந்திமொழியே - நீ

இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே

துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்

சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!

அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்

அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்

உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை

ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்