< Back
மாநில செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக பார்த்தால்.. என் செயலை கேலி செய்ய மாட்டார்கள் - அண்ணாமலை
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக பார்த்தால்.. என் செயலை கேலி செய்ய மாட்டார்கள் - அண்ணாமலை

தினத்தந்தி
|
28 Dec 2024 9:16 PM IST

அரசியல் வாதியாகப்பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக பார்த்தால்.. என் செயலை கேலி செய்ய மாட்டார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அரசை கண்டித்து, தனக்கு தானே சாட்டையால் அடித்து கொண்டுள்ளார் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை.. இந்த நூதன கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியல் தலைவராக என்னை பார்க்காதீர்கள். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் சகோதரனாக பாருங்கள். ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய கோபம். சிஸ்டம் பெயில் ஆகும்போது யாரிடம் போய் சொல்வீர்கள். சிஸ்டம் பெயில் ஆகி விட்டது. நேர்மையாக இருக்கக்கூடிய, நடுநிலையாக இருக்கக்கூடிய காவல்துறை நடுநிலையாக இருந்தார்களா..? இல்லை.

எப்.ஐ.ஆர். வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை. எப்.ஐ.ஆர். எப்படி வெளிவந்தது. கண்காணிப்பு பட்டியலில் இருக்க வேண்டிய ஒரு மனிதரின் வீட்டில் அமைச்சர் பெருமக்களே போய் உணவருந்தும் புகைப்படங்களை பார்க்கிறோம். சிஸ்டம் கெட்டுப்போய் விட்டது. இதனை எதிர்த்து போராட்டம் பண்ணினால் கைது செய்யப்படுகிறோம். இதில் கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது. எந்த வழிகளும் இல்லை. அதனால்தான் இதை எடுக்க வேண்டிய கட்டாயம். நான் இதை ஒரு வேள்வியாக, தவமாக எடுத்திருக்கின்றேன்" என்று அண்ணாமலை கூறினார்.

மேலும் செய்திகள்