< Back
மாநில செய்திகள்
விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன் குட் பிலிம் - திமுக  மாணவரணி தலைவர்
மாநில செய்திகள்

விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன் குட் பிலிம் - திமுக மாணவரணி தலைவர்

தினத்தந்தி
|
28 Oct 2024 10:21 AM IST

விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய், 'பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்' மேலும் தமிழகத்தில் திராவிட மாடல் என்று ஏமாற்றி ஒரு குடும்பத்தினர் கொள்ளையடித்து வருவதாக தாக்கி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைச்சர் ரகுபதி,

தமிழக மக்களிடம் இருந்து திராவிட மாடலை பிரிக்க முடியாது. திராவிட மாடலை திட்டிக் கொண்டே தனது கொள்கையில் எங்களது கொள்கைகளை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார் விஜய். விஜய்யின் கட்சி பாஜகவின் ஏ டீமோ, பி டீமோ அல்ல.. அது பாஜகவின் சி-டீம் என கூறி இருந்தார்.

இதற்கிடையே இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கிண்டலாக ஒரு டுவீட் செய்துள்ளார். விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாகவும் இந்த படம் கூட 100 நாள் ஓடும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,

"உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!! குட் பிலிம்.. 100 நாள் திரையரங்கிளும்!! ஓடிடியில் கொஞ்சநாளும் ஓடும்!.. வாழ்த்துகள் விஜய்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தையும் அதில் டேக் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்