'இந்தி மீது பூசிய கருப்பு மை... என் முகத்தில் பூசியது போல் கருதுகிறேன்' - வெங்கையா நாயுடு
|இந்தி மீது பூசிய கருப்பு மையை தனது முகத்தில் பூசியது போல் கருதுவதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 20-வது ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சதாசிவம், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, இந்தியாவில் 2 சதவீத மக்களே ஆங்கிலத்தை புரிந்து கொள்வதாகவும், அனைவரும் இந்தி உள்பட மற்ற மொழிகளை படிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட அவர், இந்தி எழுத்தின் மீது கருப்பு மை பூசி அழித்ததை, தன்னுடைய முகத்திலேயே பூசியது போல் கருதுவதாக தெரிவித்தார்.
மேலும் சூரிய உதயத்தின்போதே எழுந்திருக்க வேண்டும் என்று பேசிய வெங்கையா நாயுடு, தான் குறிப்பிட்டது வானத்தில் உதிக்கும் சூரியன்(Sun) என்றும், இங்குள்ள உள்ளூர் கட்சி தலைவரின் மகன்(Son) அல்ல என்றும் மறைமுகமாக அரசியல் நகைச்சுவை கலந்து பேசினார்.