< Back
மாநில செய்திகள்
ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்: மனோ தங்கராஜ்
மாநில செய்திகள்

ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்: மனோ தங்கராஜ்

தினத்தந்தி
|
8 Nov 2024 8:42 PM IST

நடிகர் சூர்யாவை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார்.

சென்னை,

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று சந்தித்து பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

" நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்தேன். அவரது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளுக்கு எனது பாராட்டினை தெரிவித்தேன். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கும் எனது முயற்சி குறித்தும், நான் இளம் வயது முதல் Good Vision Seva Trust மூலம் ஆற்றிவரும் சமூகப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். நடிகர் என்ற அடையாளத்தை கடந்து சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்:" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்