< Back
மாநில செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது எப்படி? - அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது எப்படி? - அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்

தினத்தந்தி
|
27 Dec 2024 5:25 PM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவியிடம் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

"அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH - Prevention of Sexual Harrasment Committee) உள் விசாரணை குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்