< Back
மாநில செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை
மாநில செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
8 Nov 2024 7:52 AM IST

தொடர் மழையால் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து, இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்