< Back
மாநில செய்திகள்
வரும் 30ம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வரும் 30ம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Oct 2024 12:51 PM IST

கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் 30ம் தேதி விடுமுறை என சிவகங்கை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினம் கொண்டாடப்பட உள்ளது.

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவின்பொழுது ஆண்டுதோறும் ஒரு சில கட்டுப்பாடுகள் சிவகங்கையில் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, திருப்புவனம் அருகே செயல்படும் கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் 30ம் தேதி விடுமுறை என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

வரும் 30ம் தேதிக்கு குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்