< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திராவிட மாடலின் மகுடத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஒளிவீசுகிறது: மு.க.ஸ்டாலின்
|21 Oct 2024 10:17 PM IST
திராவிட மாடலின் மகுடத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஒளிவீசுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத்துறை.
நாள்தோறும் நலப்பணிகள் என நாடு போற்றும் இந்தத் துறையின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 379 இணையர்களுக்கு வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, 31 இணையர்களை நேரில் வாழ்த்தி அகம் மகிழ்ந்தேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.