< Back
மாநில செய்திகள்
கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
29 Nov 2024 3:58 AM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) கரையை கடக்கிறது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்