< Back
மாநில செய்திகள்
கனமழை எச்சரிக்கை : மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை : மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தினத்தந்தி
|
26 Nov 2024 12:20 PM IST

கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். இதன்படி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவத் துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்