< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனமழை எச்சரிக்கை: சென்னை ஐகோர்ட்டுக்கு நாளை விடுமுறை
|15 Oct 2024 6:06 PM IST
சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கிய நிலையில், இன்று காலையில் இருந்து கனமழையாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை ஐகோர்ட்டுக்கு நாளை (அக். 16) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.