< Back
மாநில செய்திகள்
கனமழை: தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கனமழை: தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
18 Nov 2024 7:58 AM IST

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், சிவகங்கையிலும் மழை பெய்துவரும் நிலையில், அந்த மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்